96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆண் - பெண் சரக்கடித்துவிட்டு உல்லாசமாக இருந்தால் எப்படி இருக்கும்?.. நன்மையா? தீமையா?.!
மதுபோதையில் ஆணோ, பெண்ணோ தாம்பத்தியம் மேற்கொண்டால் அது கட்டாயம் பெரும் சீரழிவை தரும். அதனை இன்று விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றளவில் வயது வித்தியாசம், ஆண் - பெண் பேதமின்றி மதுபானம் அருந்தும் பழக்கத்தை கையில் எடுத்து, அதனால் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் சீரழிவு தெரியாமல் பலரும் செயல்பட்டு வருகின்றனர். ஆண், பெண் இருவரும் மதுபானம் அருந்திவிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால், அதிக ஈடுபாட்டுடன் தாம்பத்திய செயல்பாடுகளை செய்யலாம் எனவும் எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவறான விஷயம் ஆகும்.
தாம்பத்தியம் ஆண் - பெண்ணின் மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் அனுபவம் ஆகும். உடலளவில் டெஸ்ட்டிரோஜன் ஹார்மோன் அளவை பொறுத்து அனைத்தும் அமைகிறது. ஆணுக்கும் - பெண்ணுக்கும் ஒரே வயதில் சுரக்கும் டெஸ்டிரோஜன், போதைப்பொருள் பழக்கத்தால் உடலின் ஹார்மோனை வேகமாக சுரக்க வைக்கும் தன்மை கொண்டது ஆகும்.
இவை இயற்கைக்கு மாறாக நரம்புகளை தூண்டிவிட்டு செயலாற்ற வைக்கிறது. இதன் வீரியம் தான் அதன் ஆபத்தும் ஆகும். எவ்வுளவு வேகமாக ஹார்மோனை தூண்டுகிறதோ, அதே வேகத்தில் அதனை விரைந்து காலி செய்து சில வருடங்களில் செயலிழக்கவும் வைக்கும். தாம்பத்திய நடவடிக்கையின் போது போதையினால் உற்சாகம் கிடைபோது போல மாயை ஏற்படும். அது உண்மையானது அல்ல. அந்த மாயையை நம்பி செயல்பட்டால், உடலின் நிலை வெகுவாக மாற தொடங்கும்.
அதனால் மன நிறைவு என்பது ஏற்படாது. மேற்படி உச்சகட்டத்தை பெறவும் உதவி செய்யாது. சில நேரத்தில் போதைப்பொருள் உச்சகட்ட நிலையை தடுக்கும் ஆற்றலையும் கூடாது. இவை பேராபத்தை ஏற்படுத்தும். புகைப்பழக்கம் உள்ளவர்களால் குறிப்பாக ஆண்களால், அதிவேகத்தில் தாம்பத்திய செயல்பாடுகளில் ஈடுபட இயலாது. அதனைப்போல, புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு தாம்பத்தியத்தின் போது பிறப்புறுப்பில் சுரக்கும் திரவம் சுரக்காமல் வறட்சி ஏற்படும்.
இதற்கு முழு காரணம் புகையிலையில் உள்ள நிகோடின் ஆகும். மன உளைச்சலை குறையும் மருந்தில் கூட குறிப்பிட்ட அளவு நிகோடின் உள்ளது. இவ்வாறான மருந்துகளை எடுத்துக்கொண்டால், தாம்பத்திய ஆர்வம் சில மாதங்கள் அல்லது வருடங்களில் வெகுவாக குறைந்துவிடும். போதை முதலில் உடலின் நரம்பு மண்டலத்தை நேரடியாக தொடர்பு கொள்கிறது. இதனால் முதலில் மகிழ்ச்சி இருப்பது போல தோன்றும்.
ஆனால், நாட்கள் கடக்கும் போது ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு, அதிகளவு மதுபானம் அருந்துபவர்கள் அவர்களின் உணர்வை இழக்க வழிவகை செய்யும். தாம்பத்தியத்தில் உச்சகட்டத்தை தூண்டும் நரம்பை நேரடியாக தாக்கி, அதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் போதையில் விந்து வெளியேற அல்லது உச்சகட்டம் அடைய நேரம் ஆகும் என நினைத்து, அதனை மீண்டும் செய்தால் ஒட்டுமொத்த உற்பத்தியும் தடைபடும். சில நேங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம்.
மதுபோதையில் ஏற்கனவே மதியிழப்பதால், ஆகா ஓகோவென அரை மயக்கத்தில் உல்லாசமாக இருந்து, அதனை நீண்ட நேரம் என கணக்கில் எடுத்து உடல் நலம் சீரழிக்கப்படுகிறது. மேலும், போதையில் ஆண் தனக்கு ஆசை வந்ததும், அதனை தீர்க்க முயற்சி செய்வனே தவிர்த்து, பெண் துணையின் குறைந்தபட்ச ஆசையை கூட நிறைவேற்ற முயற்சிக்க மாட்டான். பெண்ணும் போதையில் இருந்தால் இதே நிலை தான். இதனால் தாம்பத்திய உறவின் போது சண்டையும் ஏற்படலாம். போதையில் உல்லாசமாக இருப்பது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் பேராபத்து என்பதை புரிந்துகொண்டால் நல்லது.