அச்சச்சோ.. தாம்பத்தியத்தை தவிர்த்தால் ஏற்படும் பேராபத்துகள் என்னென்ன?.. தம்பதிகளே உஷார்..! 



What are the disadvantages of avoiding Sexual Intercourse Tamil

திருமணம் என்ற பந்தத்தில் இணையும் தம்பதிகள், தங்களின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் நோக்கிலும், இல்லறத்தை மென்மேலும் ஆழப்படுத்த தாம்பத்திய பந்தத்தில் இணைவது உலகவழக்கம். பருவ வயதை கடந்து திருமணம் நடந்ததும் உடலுறவு அத்தியாவசியம் என சொல்கிறது காமசூத்திரம். 

ஆண், பெண் படைப்பின் போது அவர்களின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அறிவாற்றல் என ஒவ்வொரு விஷயமும் அதற்குள் ஹார்மோன் பெயரில் உட்செலுத்தப்படுகிறது. அந்த ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு மற்றும் நமது உணவு, உடல் ஆரோக்கிய அடிப்படையில் நமது வயதுவரும் நிகழ்வும் தீர்மானிக்கப்படுகிறது.

18 plus

பருவமடைந்த ஆணுக்கு விந்துப்பை வளர்ச்சி, விந்து உற்பத்தி தொடக்கம் என இயற்கை தனது செயலை தொடங்க, பெண்களுக்கு கருப்பை வளர்ச்சி, கருமுட்டை வெளியேற்றம் என அடுத்தடுத்த செயல்கள் தொடங்குகின்றன. ஆண் விந்து சுரக்க தொடங்கி அதனை பருவ வயதை கடந்து பல வருடமாக வெளியேற்றாமல் வைத்திருந்தால், அதனால் பக்கவிளைவுகள் ஏற்படும். 

இயல்பாக, நாம் நமது உடலில் எந்த உறுப்பை பயன்படுத்தாமல் வைக்கிறோமோ, அந்த உறுப்பு நாளடைவில் பயனற்று போகிறது அல்லது செயல்திறனை இழக்கிறது. இஃது பெண்களுக்கும், ஆண்களுக்கும் பொருந்தும். அதனால் தான் தாம்பத்திய விஷயத்தில் தம்பதிகள் இணையவேண்டியது அத்தியாவசியமாகிறது. 

18 plus

அப்படி அந்தரங்க உறுப்புகளை வருடக்கணக்கில் பருவ வயது கடந்தும், திருமணம் செய்தும் உபயோகம் செய்யாமல் இருந்தால் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி உடல் ரீதியான மற்றும் மன ரீதியான கோளாறுகள் ஏற்படும். அது நரம்பு பலவீன பிரச்சனை, மனநோய், அஜீரண கோளாறு, நெஞ்சிடிப்பு, தலைபாரம் போன்ற பிரச்சனையையும் ஏற்படுத்தும். கட்டில் இன்பம் வாழ்நாளை கெட்டிப்படுத்தும் என்பதை மறவ வேண்டாம்.