கிறிஸ்துமஸை முன்னிட்டு அடிமைகளுக்கு ஒரு நாள் லீவு விட்ட முன்னோர்கள்! சுவாரசிய தகவல்!



How ancient people celebrated Christmas

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இயேசு பிறந்த நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் என கொண்டாடுகிறோம். உலகம் முழுவதும் பலவிதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்  கிறிஸ்துமஸ் பண்டிகையை  சற்று வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் கொண்டாடப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பாரசீக நாட்டில் உள்ள அணைத்து  அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் சிலர் பொருட்களை மாற்றிகொளவ்து போல தங்களது அடிமைகளை பரிசாக பரிமாறி கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது.

Christmas

மேலும் சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும், அவர்கள் சந்தோசமாக செயல்படவும் வாய்ப்பு வழங்கியதாவும் குறிப்புகள் உள்ளன.

பண்டைய காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்களுக்கு பேய், பிசாசு போன்றவற்றிக்கு அதிகமாக பயந்ததாகவும், இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.