35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
இயேசு பிறந்தது டிசம்பர் 25 இல்லையா? கிறிஸ்துமஸ் சுவாரசிய பின்னணி!
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இயேசு பிறந்த நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் என கொண்டாடுகிறோம். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை மிகவும் சுவாரஸ்யமானது.
கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு என கூறபடுகிறது. இதுவரை இயேசு சரியாக எந்த ஆண்டு, எந்த தேதி பிறந்தார் என்பது யாருக்கும் சரியாக தெரியாது. கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
அதேபோலவே டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு ஒரு தோராய அடிப்படியில்தான் கொண்டாடப்படுகிறது.