96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கிறித்துமஸ் கேக் பின்னாடி இவளோ விஷயங்கள் இருக்கா?
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இயேசு பிறந்த நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் என கொண்டாடுகிறோம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் பரிமாறப்படும் முக்கிய உணவுகளில் ஒன்றாக கிறிஸ்துமஸ் கேக் உள்ளது. இதன் சுவை அனைவரையும் சுண்டி இழுக்கும். இங்கிலாந்தில் இந்த கேக்கானது மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படும்.
இதற்கு காரனம், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இங்கிலாந்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் ப்ளம் கேக் செய்வார்கள்.
அப்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் முன்னிலையிலும் கேக் செய்வதற்குரிய் மாவைக் கொட்டி அவர்கள் அனைவரும் சேர்ந்து பிசைவர். தன் பங்காக அக்குடும்பத்தின் தலைவி ரகசியமாக வெள்ளியிலான ஒரு பென்னி நாணயத்தை மாவுடன் கலந்து விடுவார்.
இறுதியாக உருவாக்கப்பட்ட கேக் ஒரு மறைவிடத்தில் வைக்கப்படும். கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்தக் கேக்கை எடுத்து குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பரிமாறுவர்.
உண்ணும்போது யாருக்குக் கேக்கிலிருந்து வெள்ளிக் காசு கிடைக்கிறதோ அவர் கிறிஸ்துமஸ் தினத்தின் அதிர்ஷ்டசாலியாக கருதப்பட்டு அனைத்துப் பரிசுகளும் அவருக்கே வழங்கப்படும்.