திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2024-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்த 3 படங்கள்: விபரம் இதோ.!
உலகமே 2023-ம் ஆண்டை வழியனுப்பி வைத்துவிட்டு 2024-ம் ஆண்டை வரவேற்க காத்திருக்கிறது. இதனால் நடப்பாண்டில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை பலரும் திரும்பி பார்த்து வருகின்றனர்.
இந்திய திரையுலகை பொருத்தவரையில் நடப்பு ஆண்டு பல முன்னணி நடிகர்களை உலகளவில் அங்கீகரிக்க வழிவகை செய்தது. தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு மட்டும் 240-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன.
இந்நிலையில் 2024-ம் ஆண்டு தொடங்கியதும் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்மஸ், ரித்திக் ரோஷன் நடிப்பில் பைட்டர், அல்லு அர்ஜுன், ராஸ்மிகா நடித்துள்ள புஷ்பா 2 ஆகிய திரைப்படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பின் வெளியிடப்படும் படங்களாக இருக்கின்றன.
இதில் பைட்டர் மற்றும் மேரி கிறிஸ்மஸ் திரைப்படங்களின் வெளியீடு தேதிகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புஷ்பா 2 திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.