தினமும் டார்ச்சர்.. கணவனின் அந்தரங்க உறுப்பை அறுத்துக் கொன்ற மனைவி.!



  in Ariyalur Wife Killed Husband

அனுதினமும் தொந்தரவு செய்த கணவனை, மனைவி ஆணுறுப்பு அறுத்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பா (வயது 45). இவரின் மனைவி பச்சையம்மாள் (வயது 43). மதுபோதைக்கு அடிமையான சின்னப்பா, போதையில் எப்போதும் மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இதனிடையே, டிசம்பர் 17 ம் தேதியான நேற்று, வழக்கம்போல சின்னப்பா தனது மனைவி பச்சையம்மாளிடம் தகராறு செய்துள்ளார். போதையில் சித்ரவதையும் தொடர்ந்துள்ளது. இதனிடையே, நேற்று அவரின் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சின்னப்பா சடலமாக மீட்கப்பட்டார். 

இதையும் படிங்க: போதையில் அம்மாவிடம் அனுதினம் தகராறு; தந்தையை கட்டையால் தாக்கி போட்டுத்தள்ளிய மகன்.!

Murder

காவல்துறையினர் விசாரணை

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சின்னப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், குடிபோதைக்கு அடிமையான சின்னப்பா, தினமும் போதையில் சித்ரவதை செய்வது, தாக்குவது என தொடர்ந்த காரணத்தால், கணவனின் கொடுமை தாங்காமல் இரும்பு கம்பியால் தாக்கி இருக்கிறார். பின் ஆத்திரம் திடீரென அதிகமாகி, கத்தியை எடுத்து மர்ம உறுப்பை மறுத்துள்ளார். இதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க: மருத்துவ செலவுக்கு பரிதவித்து, காதல் மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; கணவனும் தற்கொலை.!