குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
துணிதுவைக்க சென்ற 3 பெண்களுக்கும், அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்! வெளியான பதறவைக்கும் சம்பவம்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனையூர் கிராமத்தில் வசித்து வருபவர் பொன்னையா. இவரது மனைவி இந்திரா. 34 வயது நிறைந்த இவருக்கு 13 வயதில் சுமித்ரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் இருவரும் பனையூர் பெரியகுளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.
மேலும் அவர்களுடன், அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருடைய மனைவி அனந்தம்மாள் செல்வியும் குளத்திற்கு சென்றுள்ளார். பின்னர் குளத்திற்கு சென்ற இந்திரா மற்றும் அனந்தம்மாள் இருவரும் கரையில் அமர்ந்து துணிகளை துவைக்க சுமித்ரா தேவி தண்ணீருக்குள் இறங்கி குளிக்க சென்றுள்ளாள். அப்பொழுது அவர் தண்ணீரில் மூழ்கியநிலையில் அவரை காப்பாற்ற சென்ற நீச்சல் தெரியாத அவரது தாய் இந்திராவும் தண்ணீருக்குள் இறங்கியுள்ளார்.
அவரும் நீரில் மூழ்கிவிட்ட நிலையில், அவரை காப்பாற்ற சென்ற அனந்தம்மாளும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அப்பொழுது சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் குளத்தில் இறங்கி தண்ணீருக்குள் மூழ்கியவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர். துணி துவைக்கச்சென்ற 3 பெண்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.