அடேங்கப்பா! 80களில் சினிமாவையே கலக்கிய அத்தனை பிரபலங்களும் ஒரே இடத்திலா? தீயாய் பரவும் பிரமிக்கவைக்கும் புகைப்படம்!



80-actor-actress-met-in-chiranjeevi-house

1980களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஆயிரக்கணக்கான ரசிகர்களை தங்களது நடிப்பால் கட்டிப்போட்டு கொடி கட்டி பறந்தவர்கள் ரஜினி, கமல், சரத்குமார்,  பாக்கியராஜ், பிரபு,  நாகார்ஜுன், ஜெயராம், ரகுமான், குஷ்பூ, ராதிகா, சரிதா,  ராதா, ஷோபனா, ரேவதி, பூர்ணிமா, ரமேஷ் அரவிந்த், சுகாசினி, மேனகா, ஜெயசுதா. அவர்களைப் போலவே தெலுங்கு சினிமாவிலும் கொடி கட்டி பறந்தவர்கள் சிரஞ்சீவி மோகன்லால்,  வெங்கடேஷ்,  கஜபதி பாபு, ஜாக்கி ஷெராப், சுரேஷ் வெங்கடேஷ். லிசி இன்னும் ஏரளாமானோர்.

இவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து கொள்வது வழக்கம். அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் சமீபத்திலும் 1980களில் கொடி கட்டி பறந்த சில பிரபலங்களின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

cinema

இந்த சந்திப்பு பிரபல நடிகர் சிரஞ்சீவி வீட்டில் நடைபெற்றுள்ளது. இதில் பல பிரபலங்களும் ஒரே நிற ஆடையில் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் அத்தகைய நாளை அவர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து கட்டி அணைத்தும்,  கைகளை குலுக்கியும் தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.மேலும் அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டனர் அதனைத் தொடர்ந்து சிரஞ்சீவி இல்லத்தில் அனைவருக்கும்  உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் பல பிரபலங்கள் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது தீயாய் பரவி வருகிறது.