96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சத்தம்போட்டால் அவ்வுளவுதான்., அதுங்க வந்திடும்.. மிரளவைக்கும் கொயட் பிளேஸ் டே ஒன் படத்தின் டிரைலர்.!
பாராமவுண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், மைக்கேல் சார்னோஷி இயக்கத்தில், ஜான் கிராசின்ஸ்கியின் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ய கொயட் பிளேஸ்: டே ஒன் (A Quiet Place: Day One). இப்படம் 28 ஜூலை 2024 ல் உலகளவில் வெளியாகிறது. பிராந்திய மொழிகளிலும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொயட் பிளேஸ் சீரிஸ் படங்கள்:
அமெரிக்காவின் பதறவைக்கும் பல படங்களில் கொயட் பிளேஸ் தொடர்ச்சியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாகத்தின் இரண்டாவது டிரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன. நியூயார்க் நகரில் இரத்தவெறி கொண்ட வேற்றுகிரக உயிரினங்களிடம் இருந்து தப்பிக்கும் பெண்ணின் கதையை கொண்ட படமாக இது இருக்கிறது.
இரண்டாவது டிரைலர் வெளியீடு:
இப்படத்தில் நடிகர்கள் லூபிடா நியோங்கோ, ஜோசப் க்வின், அலெக்ஸ் வோல்ஃப், டிஜிமோன், எலியன் உமுஹிரே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் அசரவைக்கும் டிரைலர் காட்சிகள் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.