படத்தின் ஆழத்த காட்டணும்.. நிர்வாண காட்சிகளுடன் வெளியாகும் விடுதலை படம்..! 



A viduthalai film with nude scenes

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி உட்பட பலர் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

இந்த படத்தை சமீபத்தில் படக்குழு தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், படத்தின் முதல் பாகத்தில் நிர்வாண காட்சிகள் இருந்துள்ளது. இதனால் அதனை நீக்கிவிட்டு படத்தை U/A சான்றிதழ் உடன் வெளியிடலாம் என்று தணிக்கை குழு கூறியுள்ளது.

Viduthalai movie update

ஆனால் எங்களுக்கு 'A' சர்டிபிகேட் கொடுத்தாலும் பரவாயில்லை. காட்சிகளை நீக்க முடியாது என்று வெற்றிமாறன் உறுதியாக தெரிவித்துள்ளார். இதனால் படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டு படம் வரும் மார்ச் 31-ல் வெளியாக உள்ளது