மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் அப்பாஸை புலம்ப வைத்த விஜய்.. டிவி என்ன காரணம் தெரியுமா.?
'காதல் தேசம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அப்பாஸ். மேலும் இவர் படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு இவருக்கு வாய்ப்புகள் அமையாததால், வெளிநாடு சென்றுவிட்டார்.
தற்போது இவர் மீண்டும் சென்னை வந்து நடிக்கப்போவதாக கூறியுள்ளார். இந்நிலையில், விஜய்டிவியின் "சூப்பர் சிங்கர் ஜூனியர்" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி தற்போது 9ஆவது சீசன், 90'ஸ் மற்றும் 2கே கிட்ஸ்க்கு இடையில் நடைபெற்று வருகிறது.
மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், சித்ரா, உன்னிகிருஷ்ணன், ஸ்வேதா மோகன், தமன் ஆகியோர் நடுவர்களாக கலக்கி வருகின்றனர். வாரா வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில் பல சிறப்பான பாடல்களை தேர்ந்தெடுத்துப் பாடி குட்டீஸ் கலக்கி வருகின்றனர். இதில் பேசிய அப்பாஸ்,' இந்நிகழ்ச்சியில் இந்த குட்டீஸ்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் உள்ளனர். இந்தவயதில் நான் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் இல்லை. இவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.