நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!



actor-manoj-family-photo-viral

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து அவர் அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சமுத்திரம், கடல் பூக்கள், ஈஸ்வரன், மாநாடு, விருமன் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிlu நடித்துள்ளார்.

மேலும் மனோஜ் பாரதிராஜா 2023 ஆம் ஆண்டு வெளிவந்த மார்கழி திங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். நடிகர் மனோஜின் மனைவி நந்தனா. இவர் மலையாள நடிகை. மனோஜ் மற்றும் நந்தனா இருவரும் சாதுரியன் என்ற படத்தில் நடித்த போது காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு இது வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து இருவருக்கும் 2006 ஆம் ஆண்டு கேரளாவில் திருமணம் நடைபெற்றுள்ளது.

Manoj

 அதனை தொடர்ந்து சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக பாரதிராஜா திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். நடிகர் மனோஜ் மற்றும் நந்தனாவிற்கு ஆர்த்திகா, மதிவதினி என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் மனோஜ் பாரதிராஜாவிற்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனிடையே நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே அவர் காலமாகியுள்ளார். மனோஜ் பாரதிராஜாவின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

ManojManoj

இதையும் படிங்க: இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!