100 டிகிரி சூடுள்ள ஆசிட் அடித்து உயிரை காப்பாற்றும் வண்டு; வியப்பை தரும் தகவலுடன் வீடியோ.!



Bombardier Beetles spray boiling acid 212 degrees as a defence mechanism 


உலகளவில் பல எண்ணற்ற பூச்சி வகைகள் இருக்கின்றன. இவற்றில் வண்டுகள் பல விதங்கள் உள்ளன. பாம்பார்டியர் வண்டுகள் உலகளவில் 500 க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான வண்டுகள் பார்க்க, செயல்பாடுகளில் சாதரணமாக இருந்தாலும், எதிரிகளிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள ஆசிட்டுடன் பாம் சேர்த்து தெளிக்கும் தன்மை கொண்டவை ஆகும். இவ்வகை வண்டின் அடிவயிறு பகுதியில், பைஜிடியல் சுரப்பியில் ஹைபர்க்கோலிக் ரசாயனம் சேமிக்கப்படும்.

வைரல் வீடியோ இதோ

இதையும் படிங்க: இரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த நண்பர்களுக்கு நேர்ந்த சம்பவம்; மின்சாரம் தாக்கி மூர்ச்சையானதால் பகீர்.!

இந்த ரசாயன சேர்மம் ஹைட்ரோகுவினோன், ஹைட்ரஜன் பெராக்ஸைடு இடையே வினைபுரிந்து, ஆபத்து காலங்களில் நீர்க்கரைசலை வெளியேற்றுகிறது. இதன் வெப்பம் 212 டிகிரி பேரன்ஹீட் ஆகும். அதாவது நீரின் கொதிநிலையான 100 டிகிரி செல்ஸியஸ் ஆகும். 

வயிற்றுக்குள் வெடிகுண்டு?

இதனால் ஆபத்து காலங்களில் அதிரடியாக செயல்படும் வண்டுகள், எதிரியின் மீது தாக்குதல் நடத்தி தன்னை தற்காத்துக்கொள்கிறது. வயிற்றுக்குள் வெடிகுண்டு போல அமைப்பை வைத்துள்ள வண்டு, தன்னை எதிர்த்து வரும் சிறிய உயிரினத்தை பொசுக்கும் அளவும் தன்மை கொண்டது ஆகும். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.