பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என கொண்டாடப்படுபவர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ். இவர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் மனோஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வர விரும்பிய நடிகர் மனோஜ் நேற்று இரவு தனது 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவர் சில காலங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளாராம்.
பின்னர் வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு காலமாகியுள்ளார். இந்நிலையில் அவரது மறைவு செய்தி அறிந்த திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
மனோஜ் பாரதிராஜாவின் உடல் சேத்துப்பட்டு இல்லத்தில் இருந்து நீலாங்கரை இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு புதன்கிழமை இன்று மாலை 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது