சூப்பர் ஹிட் விஜய் பட வில்லன் நடிகருக்கு கொரோனா உறுதி! உருக்கமாக அவரே வெளியிட்ட ஷாக் தகவல்!!



actor aashish vithyaarthi corono positive

பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழில் தில் என்ற படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி. அதனைத் தொடர்ந்து அவர் அர்ஜுன் நடித்த ஏழுமலை, விஜய் நடித்த பகவதி, தமிழன் மற்றும் கில்லி படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் இறுதியாக அனேகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆஷிஷ் வித்யார்த்தி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்துள்ளார்.  இந்த நிலையில் தற்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நடிகர் ஆஷிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த பாஸிட்டிவ் கொரோனா உறுதி நான் விரும்பாத ஒன்று. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தவறாமல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இப்போது எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. விரைவில் குணமாகி வருவேன் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.