96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சப் கலெக்டராக நியமனம்.. குவியும் வாழ்த்துக்கள்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் சின்னி ஜெயந்த். இவர் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
இவரின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் ஐஏஎஸ் தேர்விற்கு படித்து வந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 75-வது இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் ஸ்ருதன் திருப்பூர் மாவட்டத்தின் சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் திரைபிரபலங்கள் மற்றும் சின்னி ஜெயந்த் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.