நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
#Big Breaking: பிரபல நடிகர் டேனியல் பாலாஜி அதிர்ச்சி மரணம்... என்ன காரணம் தெரியுமா?
பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாட்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். என்னை அறிந்தால், வடசென்னை, பிகில் போன்ற பெரிய படங்களிலும் வில்லனாக நடித்துள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த தகவல் சினிமா துறையினரையும், அவரது ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. வீட்டில் இருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில்லையே உயிரிழந்தாக கூறப்படுகிறது.
நடிகர் டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளி அவர்களின் சொந்த தம்பி ஆவார். நடிகர் முரளி அவர்களும் இதேபோன்று மாரடைப்பால் உயிரிழந்தநிலையில், தற்போது அவரது தம்பி டேனியல் பாலாஜியும் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.