ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தெலுங்கு ரசிகர்களை கொந்தளிக்க வைத்த தனுஷ்.. கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்.!
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி கிண்டலுக்கும், உருவ கேலிக்கும் ஆளானவர் நடிகர் தனுஷ். தனது திறமையால் அடுத்தடுத்த படங்களை நடித்து முக்கிய நடிகராக கோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல படங்கள் நடித்து கலக்கி வருகிறார்.
கடந்த சில வருடங்களாக இவரது படங்கள் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றியை தரவில்லை. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் வெற்றி பெற்றதன் மூலம் இவர் மீண்டும் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்தார்.
வெங்கி அட்லூரி இயக்கி ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. இதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். நடிகர் தனுஷ் மேடையில் பேசிய போது "எனக்கு தெலுங்கு புரியும். ஆனால் பேச வராது. நீங்கள் எனது பக்கத்து மாநிலம் தான். எதற்காக இங்கிலீஷ்ல பேசணும். தமிழிலேயே பேசுறேன்" என்றவாறு தமிழில் பேச தொடங்கினார்.
ஹைதராபாத்திற்கு இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற போதும் தமிழில் பேசி தமிழை பெருமைப்படுத்தியதால் தனுஷ் தான் உண்மையான தமிழன் என்று தமிழ் ரசிகர்கள் பெருமிதம் கொண்டனர். ஆனால், இது தெலுங்கு ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளதாக தெரிகிறது.