குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பட பிரமோஷனுக்காக நடிகையுடன் கட்டிபிடித்து போட்டோஷூட் நடத்திய மாதவன்..! இந்த வயசுல இதெல்லாம் தேவையா மேடி சார்? - கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!
நடிகர் மாதவன் இயக்கி நடித்த திரைப்படம் ராக்கெட்ரி. இப்படத்தை விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து மாதவன் படமாக்கியிருந்த நிலையில், அந்த கதைக்கு எதிராக சில விஞ்ஞானிகளும் கருத்து தெரிவித்திருந்தது பரபரப்பை கிளப்பியிருந்தது.
மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் எந்த ஒரு சாதனையும் இப்படம் படைக்கவில்லை. தமிழில் நடிகர் சூர்யா கேமியாவாக நடித்தும் எந்த பயனும் இல்லை என ட்ரொல்கள் குவிந்த வண்ணம் இருந்தன. மேலும் இப்படத்தின் மூலமாக பல சர்ச்சைகளும் கிளம்பியது.
படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் திரைப்படம் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு Dhokha Round D Corner என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மாதவனுக்கு T-series நிறுவனத்தை சேர்ந்த குஷாலி குமார் ஜோடியாக நடித்திருப்பார்.
முதல் படத்திலேயே மாதவன் போன்ற பெரிய நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு சந்தோஷமாக உள்ளது என்று அவர் பேசியிருந்த நிலையில், அடுத்த வாரம் வெளியாகியுள்ள தனது படத்தை பிரமோட் செய்வதற்காக அறிமுக நடிகையுடன் நடிகர் மாதவன் படுநெருக்கமாக கட்டிப்பிடித்து ரொமான்டிக் போட்டோசூட் நடத்தியுள்ளார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில், இதனை கண்ட ரசிகர்கள் சாக்லேட் பாய் இமேஜ் எல்லாம் போயி ரொம்பகாலம் ஆகுது மேடி சார்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா? பட ப்ரொமோஷனுக்காக இப்படியா கட்டிப்பிடிச்சு போட்டோசூட் நடத்துவீங்க? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.