மாதவனா இது..? 50 வயது.. கறைபடிந்த பற்களுடன் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் மாதவன்.. வைரலாகும் புகைப்படங்கள்..



actor-madhavan-latest-photos-goes-viral

மிகவும் வித்தியாசமான தோற்றத்துடன் இருக்கும் நடிகர் மாதவனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ், ஹிந்தி என இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மாதவன். 50 வயது ஆகிவிட்டாலும் பெண்கள் மத்தியில் தற்போதுவரை இவருக்கு பெரிய மவுசு உள்ளது. அலைபாயுதே, மின்னலே போன்ற படங்கள் மூலம் காதல் நாயகனாக வலம்வந்த மாதவன் லிங்குசாமியின் இயக்கத்தில் ரன் திரைப்படம் மூலம் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

Madhavan

அன்றில் இருந்து இன்றுவரை காதல், ஆக்சன், த்ரில்லர் என பலவிதமான கதைக்களங்களில் நடித்து இன்று நம்பர் ஒன் நடிகர்களின் பட்டியலில் தானும் ஒருவராக இடம் பிடித்துள்ளார் மாதவன். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாதவன்.

கறைபடிந்த பற்களுடன், தலையில் முண்டாசுடன் சில புகைப்படமும், முகத்தில் வெட்டுக்காயத்துடன் சில புகைப்படங்களையும் வெளியிட்டு தனது வித்தியாசமான தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் மாதவன். ஹீரோ என்பதையும் தாண்டி பல படங்களில் தற்போது வில்லனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார் மாதவன். தற்போது இவற்றின் வித்தியாசமான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகிவருகிறது.

Madhavan

Madhavan