#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் மணிவண்ணனின் மகனா இது.? இவர் எந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் தெரியுமா.!?
தமிழ் திரைத்துறையில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர கதாபாத்திரம், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளிலும் கலக்கியவர் தான் மணிவண்ணன். இவரது நடிப்பு திறமைக்கு இன்று வரை ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர். இவரின் இடத்தை இன்று வரை வேறு எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இயக்கத்தில் வெளியான அமைதிப்படை, ஜல்லிக்கட்டு, சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற திரைப்படங்கள் மிகப் பெரும் வெற்றி அடைந்து இன்றுவரை ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. மேலும் வில்லன் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இதனை அடுத்து 2013 ஆம் வருடம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்செய்தி அறிந்த ரசிகர்கள் பலரும் சோகத்திற்குள்ளாகினர். மேலும் தற்போது மணிவண்ணனின் மகனான ரகுவண்ணன் என்பவரின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மணிவண்ணனின் மகனா இது என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் இவர் கோரி பாளையம், நாகராஜசோழன் எம் ஏ எம் எல் ஏ, தொடக்கம் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது இந்த செய்திகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள், மணிவண்ணனின் மகனான ரகுவண்ணனும் அவரைப் போல நல்ல நடிகராக வரவேண்டும் என்று வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.