மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடியால் தமிழ்நாடே சீரழந்துவிட்டது, உங்களை நம்புறாங்க - விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து மன்சூர் அலிகான்.!
நடிகர்கள் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கெளதம் வாசுதேவ் மேனன், ஜியார்ஜ் மரியான் உட்பட பலர் நடித்து வெளியாகிய திரைப்படம் லியோ. இப்படம் ரூ.600 கோடிகளை கடந்து தற்போது வரை வசூல் செய்துள்ளது.
படத்தின் இசை வெளியீடு விழா முன்னதாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணத்தால் அவை தடைப்பட்டன. தற்போது படத்தின் வெற்றிவிழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், "தமிழகத்தின் எதிர்காலமான சகோதரர் விஜய்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மதுப்பழக்கத்தால் தமிழ்நாடு சீரழிகிறது. இந்த தேசம் உங்களை நம்புகிறது.
Mansoor Ali Khan After his speech 😍❤️#LeoSuccessMeet @Actorvijay #Leo pic.twitter.com/jMEyG7Fy1m
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) November 1, 2023
நேற்று நள்ளிரவு நேரத்தில் நான் தூங்கிக்கொண்டு இருந்தபோது, கனடாவில் இருந்தவர் என்னக்கு தொடர்புகொண்டு, லியோ பிளாஷ்பேக்கில் நான் எப்படி பொய்சொல்வேன் என கேட்டார். எனக்கு எந்த பதிலும் தெரிவிக்க இயலவில்லை" என கூறினார்.
சமீபகாலமாகவே நடிகர் விஜய் தனது மக்கள் மன்றத்தின் வாயிலாக பல்வேறு நற்பணிகளை செய்து வரும் நிலையில், அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து, மறைமுகமாக தான் அரசியலுக்குள் களமிறங்கிவிட்டதை உறுதி செய்கிறார். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.