நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
உயிரிழந்தும் பலரின் உடலில் வாழும் கல்லூரி மாணவர்; உடல் உறுப்பு தானம்.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பதி, ஸ்ரீ அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு. இவரின் மனைவி தனலட்சுமி. தம்பதிகளுக்கு ராமதர்சன் (வயது 20) என்ற மூத்த மகன் இருக்கிறார். ராமதர்சன் திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
மூளைச்சாவு அடைந்தார்
மார்ச் 19 அன்று நடந்த விபத்தைத்தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். ராமதர்சன் ஒருகட்டத்தில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். இதனால் உடல் உறுப்புகளை தானம் வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதையும் படிங்க: நம்ம திருப்பூரில் இப்படியா? மெடிக்கலில் மருந்து வாங்கியபடி உயிரைவிட்ட இளைஞர்.. பதறவைக்கும் காட்சிகள்.!
ராமதர்சன் உடலில் இருக்கும் கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானம் எடுக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் ராமதர்சன் உடலுக்கு மரியாதை அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: திருப்பூர்: பஸ்டாண்டில் பிரசவ வலி.. பிறந்தது ஆண் குழந்தை... ஓடோடி வந்து உதவிய தூய்மை பணியாளர்கள், காவலர்கள்.!