மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிம்பிளாக திருமணத்தை முடித்த பிக்பாஸ் விக்ரமன்.! மணப்பெண் யாரு தெரியுமா?? வைரலாகும் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் விக்ரமன். பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் சகஜமாக பேசி பழகி, பல சமூக கருத்துக்களை கூறிவந்த விக்ரமன் பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு யூடியூப் சேனலின் அரசியல் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக இருந்த அவர் விடுதலை சிறுத்தை கட்சியின் மூலம் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் தன்னை காதலித்து பணத்தை வாங்கிகொண்டு ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விக்ரமனுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் ப்ரீத்தி கரிகாலன் என்பவரை திருமணம் செய்துள்ளார். ப்ரீத்தி 'கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘கதை திரைக்கதை வசனம்’ ஆகிய படங்களில் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவர்களது திருமணம் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற்றுள்ளது. அந்த அழகிய ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: தன் 3 குழந்தைகளின் முன்பு மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகை சன்னி லியோன்.! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
இதையும் படிங்க: "நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!