நமக்குள் அரசியலே தேவையில்லை; நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு..



actor-parthiben-speech-no-politics-in-cinima-industries

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் பார்த்திபன் ஆளும் கட்சி எதிர்க்கட்சி போன்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி நமக்குள் வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் சங்க செயற்குழுவை கூட்டி முடிவு எடுக்காமல் நடிகர் விஷால் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று கூறி ஒரு தரப்பினர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.

actor parthiben

பூட்டை உடைக்க முயன்ற சங்க தலைவர் நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் கவுதம் மேனன்  சங்க கூட்டங்களுக்கு சரியாக வராமல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. 

அதன்பிறகு தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக நடிகர் பார்த்திபன் புதிதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆளும் கட்சி எதிர்க்கட்சி போன்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி நமக்குள் வேண்டாம். நமக்குள் அரசியல் இருந்தால், அதை களைந்து ஒற்றுமை மேம்பட முயற்சிப்போம் எனவும் மேலும், தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் பதவிக்கு சூழ்நிலையை பொறுத்தே தாம் சம்மதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.