கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
நேரம் சரி இல்லனா என்ன வேணுனாலும் நடக்கும்! இந்த பிரபல நடிகர்தான் உதாரணம்!

நேரம் சரி இல்லனா என்னவேணுனாலும் நடக்கும்னு பொதுவா எல்லோரும் சொல்வது வழக்கம். பிரபல நடிகர் பிரசாந்த் வாழ்க்கையில் அது உண்மையாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். 90களில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர். விஜய், அஜித் என தற்போதைய முன்னணி நடிகர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் நடிகர் பிரசாந்த்.
தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்துவந்த பிரசாந்த் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தன. இதனால் சற்றுகாலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார் நடிகர் பிரசாந்த். இந்நிலையில் தாறுமாறாக உடல் எடை கூடி பார்ப்பதற்கே வித்தியாசமாக தோற்றமளித்தார்.
பின்னர் மீண்டும் சினிமாவில் காலடி எடுத்துவைத்த பிரசாந்துக்கு மீண்டும் அணைத்து படங்களும் தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் சமீப காலமாக மார்க்கெட் இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றார், தன் இடத்தை மீண்டும் பிடிக்க, அதற்காக தெலுங்கு படங்களில் கூட நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அப்படி ராம்சரண் நடிக்கும் ஒரு படத்தில் பிரஷாந்த் அவருடைய நண்பராக 4 பேரில் ஒருவராக நடித்துள்ளார், இதை பார்த்த தமிழக ரசிகர்கள் கொதித்து எழுந்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.