திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அச்சோ.. சிவகார்த்திகேயனை க்ளோஸ் பண்ண பிளான் போட்ட குடும்பம்.. இறுதியில் தப்பித்தது எப்படி?..!
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தற்போது தமிழ் திரையுலகின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இறுதியில் வெளியாகிய டாக்டர், டான் ஆகிய படங்கள் ரூ.100 கோடி வரை வசூல் செய்தது.
அடுத்தடுத்த வெற்றியால் பிரின்ஸ் திரைப்படமும் கட்டாயம் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்த சிவகார்த்திகேயனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்த நிலையில், அதை தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார்.
மாவீரன் மண்டேலா என அடுத்தடுத்த படங்களை அவர் நம்பியிருக்கும் நிலையில் இந்த படங்கள் ரிலீஸ் ஆகி வெற்றி பெறுமா? என்ற ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வெளியாக வேண்டும் என நான்கு படங்கள் அவரிடம் ஒப்பந்தம் இடப்பட்ட நிலையில், அதற்காக முன் தொகையாக சிறியளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஏதும் தற்போது வரை தொடங்காத நிலையில், இது குறித்து சிவகார்த்திகேயன் கேள்வி எழுப்பினாலும் சரி வர பதில் இல்லாத சூழல் இருந்துள்ளது.
இந்த சமயத்தில் சில பட நிறுவனங்கள் நாம் படம் பண்ணலாம் என்று கூற வரும்போது நான்கு படங்கள் அடுத்தடுத்து காத்திருப்பதால் சிவகார்த்திகேயனிடம் அந்த படங்களை முடித்துவிட்டு வாருங்கள் என்று கூறுவதாக தெரியவருகிறது.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையின்போது தான் சிவகார்த்திகேயன் நமது வளர்ச்சிக்கான ஒரு முட்டுக்கட்டை என்று புரிந்து கொண்டு அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்துள்ளார்.
இந்த தகவலை செய்யாறு பாலு நேர்காணலில் பகிர்ந்து கொண்ட நிலையில், மேற்படி சிவகார்த்திகேயனுக்கு முட்டுக்கட்டை போட நினைத்தவர்கள் திரைத்துறையை சார்ந்த குடும்பத்தினர் என்ற தகவல் மட்டும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யார் என்று விபரம் பொதுவெளியில் தெரிவிக்கப்படவில்லை.