96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தன் திரைப்பட நடிகையையே மணக்கவுள்ள விஷால்.?! அடடே இவரா..?!
தமிழில் ஆக்சன் திரைப்படங்களில் நடித்து நிறைய ரசிகர்களை பெற்றவர் தான் நடிகர் விஷால். ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து விஜய், அஜித் மற்றும் ரஜினி உள்ளிட்ட ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆக்ஷனில் பின்னி எடுத்தார்.
அதன்பின் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பட தயாரிப்பில் ஈடுபட துவங்கினார். இது மட்டுமல்லாமல் அரசியலிலும் அவர் ஈடுபட்டார். நடிகர் சங்க தேர்தலையும் அவர் விட்டு வைக்கவில்லை. நடிப்பை தாண்டி பல்வேறு விஷயங்களில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்த காரணத்தால் அவரது படங்கள் தோல்வி அடையத் துவங்கின.
அதன்பின் மீண்டும் தன் திறமையை நிரூபிக்க நல்ல ஆக்ஷன் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு கை கொடுக்கவில்லை. பின் அவர் அனிஷா ரெட்டியுடன் திருமணம் செய்து கொள்வதாக நிச்சயதார்த்தம் வரை சென்றது.
ஆனால் திடீரென அந்த திருமணம் நின்று போனது. இதனால் விஷால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இத்தகைய நிலையில் அவருக்கு பாண்டியநாடு படத்தில் ஹீரோயினாக நடித்த லட்சுமி மேனனுடன் திருமணம் நடக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.