திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Watch: பாதுகாப்பு வளையத்தை மீறி பாய்ந்து வந்து காலில் விழுந்த ரசிகர்; விஜய்யின் நெகிழ்ச்சி செயல்.!!
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்க நேரில் சென்றார்.
அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், வீடுகளை இழந்தவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கினார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் திடீரென பாதுகாப்பு வளையத்தை மீறி விரைந்து சென்று நடிகர் விஜயின் காலில் விழுந்தார். உடனடியாக அவரை தூக்கிய விஜய், நிர்வாகிகளை அமைதிபடுத்தவே அவர்கள் அங்கேயே நின்றனர்.
இதனை அடுத்து ரசிகரிடம் பேசியவர் செல்பி எடுக்க அனுமதி கொடுத்திருந்தார். இதனால் மகிழ்ச்சியான ரசிகரும் செல்ஃபி எடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Selfie
Thalapathy VIJAY's respect towards FANS. Million Dollar Video ❤️🤳 #ThalapathyVIJAY #NellaiWelcomesTHALAPATHY@actorvijay pic.twitter.com/YEy3yjK7df
— Telugu Vijay Fans Club (@TVFC_Offcl) December 30, 2023