திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
'திமுக'-க்கு போட்டியாக விஜயின் 'தமுக'.?! அட்டகாசமான பெயரில் பாராளுமன்ற தேர்தலில் தளபதி களமிறங்குகிறாரா.?!
நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். படங்களில் ஒருபக்கம் பிசியாக நடித்து வந்தாலும், விரைவில் அரசியல் களத்திலும் தடம் பதிக்க உள்ளார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக தனது ரசிகர் மன்றங்களை கலைத்த தளபதி அவற்றை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.
இந்த வருட பாராளுமன்ற தேர்தலை டார்கெட் செய்துள்ள தளபதி விஜய் கடந்த வாரம் பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாத தகவல்கள் வெளியானது.
இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 4ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி கட்சியாக பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளனர். மேலும் தனது அரசியல் கட்சிக்கு 'தமிழக முன்னேற்ற கழகம்' என பெயரிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனைப் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்று கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'தமுக' கட்சி எந்த அளவுக்கு இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.