96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நடிகர் விக்ரமின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? இந்த பெயர் கூட நல்லா இருக்கே!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். என் காதல் கண்மணி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விக்ரம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
படத்தின் கதைக்காக தனது உடலை வருத்தி, கதைக்கு ஏற்றாற்போல் தனது உடலை மாற்றும் மிக குறைந்த நடிகர்களில் நடிகர் விக்ரமும் ஒருவர். காசி, பிதாமகன், அந்நியன், தெய்வதிருமகள், ஐ போன்ற படங்கள் இவரது நடிப்புக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறலாம்.
பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விக்ரமின் சமீபத்திய படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. அடுத்ததாக, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணா என இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார் விக்ரம்.
பொதுவாக நடிகர், நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகும்போது தங்களது உண்மையான பெயரை மாற்றிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் நடிகர் விக்ரமும் சினிமாவிற்க்காக தனது பெயரை மாற்றி கொண்டார். ஆம், நடிகர் விக்ரமின் உண்மையான பெயர் கென்னடி ஜான் விக்டர். படத்திற்காக விக்ரம் என தனது பெயரை மாற்றிக்கொண்டார் விக்ரம்.