நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
நடிகர் சங்க கட்டிடம் இல்லாமல் கல்யாணம் இல்லை - நடிகர் விஷால் உறுதி..!
தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லத்தி. இப்படத்தில் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடித்திருக்கும் நிலையில், நடிகை சுனைனாவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ராணா புரோடக்ஷன் சார்பாக இப்படத்தை ரமணா மற்றும் நந்தா தயாரித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய விஷால், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுவரும் முதல் முகூர்த்தநாளில் தான் திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், "3500 நடிகர்கள், நாடக கலைஞர்கள் வாழ்க்கைக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எனது குழுவினர் உழைத்துவருகின்றனர். அவர்களது வாழ்க்கை தரம் உயர்த்த உழைத்துவருகின்றேன். அவர்களுக்கு மருத்துவ வசதி, இன்சூரன்ஸ் வசதிகள் கிடைக்கவேண்டும். கட்டிடம் முடிந்து திருமணம் நடக்கும்போது அனைவரையும் அழைப்பேன்" என்று விஷால் கூறியுள்ளார்.