நிறைமாத கர்ப்பிணியாக கணவருடன் போட்டோஷூட் நடத்திய நடிகை நமீதா....! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்....



actr-namitha-pregancy-photo

தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல்படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. ஏய் படத்தை தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் நமீதா.

மேலும் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் நடிகை நமீதா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

பின்னர் உடல் எடை கூடி படவாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் 2017-ம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால நண்பரும், காதலருமான வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணமாகி 5 ஆண்டுகள் கழிந்து, தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துத்துள்ளார்.

அந்த  பதிவில், தாய்மை... புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. நான் விரும்பியதெல்லாம் உன்னைதான். உனக்காக இவ்வளவு நாள் வேண்டிகொண்டிருந்தேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகளை என்னால் உணர முடிகிறது. இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் நடிகை நமீதா தற்போது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ  அந்த புகைப்படங்கள்....