குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
சேலையில் கொள்ளை அழகில் போஸ் கொடுத்த நடிகை அதுல்யா ரவி! புகைப்படம்.
தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால் ஒருசிலர் தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நடிகை அதுல்யா ரவி. குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோயம்பத்தூர்.
இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகை அதுல்ய அடுத்ததாக சமுத்ரகனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்துவருகிறார்.
மேலும் நடிகை அதுல்யா ரவிக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மிகவும் அதிகம். இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். அந்த வகையில் பச்சை வண்ண சேலையில் மிகவும் அழகாக தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்றை அதுல்யா வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.