குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
"என்னுடைய காதல் உறவு மிகவும் டாக்சிக்காக இருந்தது" முதன்முதலில் காதலரை குறித்து மனம் திறந்த அஞ்சலி..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அஞ்சலி. இவர் தமிழில் அங்காடி தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், சிங்கம் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பெயர் பெற்ற நடிகையாக வலம் வந்தார்.
மேலும் இவரது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பெற்றிருந்த அஞ்சலி சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாமல் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.
மேலும் காதல், கிசுகிசு போன்ற பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். இதனையடுத்து தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அஞ்சலி தனது காதல் உறவைப் பற்றி முதன் முதலில் மனம் திறந்து இருக்கிறார்.
அவர் கூறியதாவது, "நான் இதற்கு முன்பாக ஒரு டாக்ஸிக்கான காதல் உறவிலிருந்தேன். பெண்களுக்கு காதல் அல்லது கல்யாணம் நடந்த பின்பு ஏதாவது ஒன்றை தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற கட்டாயம். ஆனால் எனக்கு இரண்டிலுமே வெற்றிகரமாக வரவேண்டும் என்று ஆசை. இதனால் என் காதல் உறவு சரி வர அமையவில்லை என்று கூறியிருக்கிறார்.