மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு.! பிரபல சீரியல் நடிகை பட்ட துயரங்கள்!! அவரே பகிர்ந்த ஷாக் தகவல்!!
சின்னத்திரையில் தனது மூன்று வயதிலேயே நடிக்க துவங்கியவர் நடிகை அஷ்ரிதா. அவர் அம்மா அப்பா என்ற சீரியலின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவர் கனா காணும் காலங்கள், சொந்த பந்தம், கல்யாணப்பரிசு, நாம் இருவர் சொந்த இருவர், தேன்மொழி பி ஏ, மற்றும் அண்மையில் முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.
அஷ்ரிதா பேட்டி
மேலும் நடிகை அஷ்ரிதா தெகிடி, திருமணம் எனும் நிக்கா, ஆறாவது சினம், என்னை அறிந்தால், கொரில்லா, வனமகன் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்களே.. கவனம்! அலட்சியமாக இருக்காதீங்க.! மருத்துவமனையில் இருந்து பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ.!
விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு
அவர் கூறியதாவது, எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போனது. ரொம்ப யோசித்தால்தான் சில விஷயங்கள் நினைவில் வரும். அப்பொழுது பயங்கரமாக தலைவலிக்கும்.
அஷ்ரிதா மன தைரியம்
இனி நடக்கவே முடியாது, உயிர் வாழவே முடியாது. ஒருவேளை பழைய நிலைக்கு திரும்ப 10% தான் வாய்ப்பு இருக்கு.அதனால் அவர் வீட்டிற்குள்ளே இருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் நான் எனது அம்மா மற்றும் என் மன தைரியத்தால் ஒரு மாதத்திற்குள்ளேயே கேமரா முன் வந்து நின்றேன். மருத்துவர்களே ஆச்சரியமாக பார்த்தார்கள் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்னை பெருமைபடுத்திவிட்டான்.. செம ஹேப்பியாக தன் தம்பிக்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்!!