96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அழகு பதுமை சின்னத்தம்பி பவானியின் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா! கண்ணீருடன் உண்மையை உடைத்த நடிகை!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மிகவும் கலகலப்பாகவும், கண்ணீருடனும் சென்று கொண்டுள்ளது. கடந்த இரு தினங்களாக பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த சோகமான பாதையை குறித்து சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இதில் பலரது வாழ்க்கை கதைகள் அனைவரையும் கண்கலங்க வைத்தது. மேலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறியும் வருகின்றனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சீரியல் நடிகை பவானி ரெட்டி தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தினை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
#Day5 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/aPXHqA5lcx
— Vijay Television (@vijaytelevision) October 8, 2021
அதில் அவர், தனது கணவர் பிரதீப் திடீரென தற்கொலை செய்து கொண்டது குறித்தும், அதனைத் தொடர்ந்து தான் அனுபவித்த கஷ்டங்களை குறித்தும் வேதனையுடன் கூறியுள்ளார். அப்பொழுது அவர் தனது கணவருடன் தான் நிறைய கனவுகள் கண்டதாகவும், அவர் தன்னை குழந்தைபோல பார்த்து கொண்டதாகவும் கண்கலங்கியவாறு கூறியுள்ளார். இதனால் ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடே சோகத்தில் மூழ்கியது.