மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"3 நாள் ஸ்கூலுக்கு போகல., ஒரு மாதிரி பாத்தாங்க".. சிறுவயதில் வெளியான மார்பிங் போட்டோ.! கதிகலங்கிய சீரியல் நடிகை.!!
தமிழ் திரையுலகில் வெளியான தனுஷின் 3 திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரில்லா. இவர் அதனை தொடர்ந்து குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
மேலும் விஜய் டிவியின் நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமடைந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை கவர்ந்த நிலையில், ஈரமான ரோஜாவே 2 நெடுந்தொடரில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: வில் ஸ்மித் நடிப்பில் 'பேட் பாய்ஸ்': ரைட் ஆர் டை படத்தின் ட்ரைலர் இதோ.!
கேப்ரில்லாவின் சமீபத்திய பேட்டி
இந்நிலையில் நடிகை கேப்ரில்லா தனது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு துயரமான விஷயத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னிடம் போன் எதுவும் கிடையாது. முழுவதும் படிப்பில் கவனம் செலுத்தி வந்தேன்.
மார்பிங் செய்யப்பட்ட போட்டோ
அப்போது எனது புகைப்படத்தை யாரோ மார்பிங் செய்து வெளியிட்டார்கள். அதில் இருப்பது நானே கிடையாது எனினும், புதிதாக பார்ப்பவர்களுக்கு என்னைப் போலவே தான் அந்த போட்டோ இருந்தது. இதனால் மூன்று நாட்களுக்கு நான் பள்ளிக்கு செல்லவில்லை.
வீடியோ நன்றி: Galatta Pink
அதன் பின் பள்ளிக்கு சென்ற போதும் என்னை அனைவரும் ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அந்த சமயம் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அதிலிருந்து வெளிவர எனக்கு பல நாட்கள் ஆயிற்று" எனக் கூறியிருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: தளபதி விஜயுடன் இயக்குனர் வெங்கட் பிரபு; கோட் பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக்.!