அடுத்த எலிமினேஷன் யார்? கமல்ஹாசனை கலாய்த்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட பதிவு! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!



actress-kasthuri-teased-kamal

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்விக்கு பிறகு அடுத்தடுத்தாக மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் விலகி வருகின்றனர். முதலில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் கட்சியிலிருந்து விலகினார். 

அவரை தொடர்ந்து நேற்று மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளரும், வேளச்சேரி தொகுதியின் வேட்பாளருமான சந்தோஷ் பாபு ஐஏஎஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். பின்னர் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இதனை கலாய்த்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட யூடியூபர்  பத்மபிரியா மற்றும் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட சந்தோஷ் பாபு இருவருமே தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தனர். தற்போது இருவருமே விலகிவிட்டனர். இது கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் போல தெரிகிறது. அடுத்த எலிமினேஷன் யார்? என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.