#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யார் இந்த கீர்த்தி சுரேஷ்? என்ன படித்துள்ளார், அவரது பின்னணி என்ன? முழு விவரம் இதோ!
கீர்த்தி சுரேஷ். தற்போதைய தமிழ் சினிமாவின் தாரக மந்திரம். விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திவிட்டார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் உள்ளே வந்த சிறிது காலத்திலேயே அசைக்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார் நடிகை கீர்த்தி.
தனி ஒரு நடிகையாக இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பை அணைத்து நடிகர் நடிகைகளும் பாராட்டினார்கள். தற்போது விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் சண்டக்கோழி இரண்டாம் பாகத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ்தான் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர் யார், இவரது பின்னணி என்ன? இவர் எப்படி சினிமா துறைக்கு வந்தார் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி 1992 இல் பிறந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவரது வயது 25. தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
மலையாள திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் குமார்தான் இவரது தந்தை. இவரது தாய் பெயர் மேனகா. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார் இவரது தாய் மேனகா. மிகவும் பிரபலமான இவர் இதுவரை பலநூறு திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
பைலட்ஸ், குபேரன், அச்சனியனெனிக்கிஷ்டம் என மூன்று திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தனது எட்டாவது வயதில் சினிமாத்துறைக்குள் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்த இவர் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படம் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்.
அதை தொடர்ந்து ரிங் மாஸ்டர், டர்போனி போன்ற மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்த இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து நேனு சைலஜா என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார்.
தற்போது இருபத்தி ஐந்து வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் பேஷன் டிசைனிங் படித்து முடித்துள்ளார். தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், பாலிவுட், ஹாலிவுட் என இவரது புகழ் பரவ தமிழ் ஸ்பார்க் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.