நடிகர் விஜயால், ஸ்டாலினுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. உற்சாகத்தில் உடன்பிறப்புக்கள்.!



tvk indirectly helps to dmk party in 2026 election

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தங்களது கட்சி வரும் தேர்தலில் தனித்து போட்டியிட இருப்பதாக அறிவித்தார். தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருட காலம் இருக்கின்ற நிலையில், தற்போது இருந்தே தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

சமீபத்தில் தான் நடிகர் விஜய் தனது அரசியல் வருகையை உறுதி செய்து கட்சியை அறிவித்து, தனது கட்சியை செயல்படுத்தி வருகின்றார். இந்த நிலையில், அவர் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளார். அவரது ஆலோசனையின் அடிப்படையில் வரும் தேர்தலை அவர் தனித்து போட்டியிட போவதாக தெரிகிறது.

TVK

இதன் காரணமாக திமுக, பாஜக, அதிமுக, தவெக உள்ளிட்ட 5 கட்சிகள் தேர்தலில் போட்டியிட இருக்கின்றன. ஏற்கனவே, நடைபெற்ற தேர்தலில் விஜயின் தவெக மட்டுமல்லாமல் 4 முனை போட்டி நிலவியது. அதிமுக தன் பலத்தை இழந்த நிலையில் திமுக எளிதாக வெற்றி பெற்றது. 

இதையும் படிங்க: #Breaking: நீ நாசமா போவ, என் கண்ணீர் உன்னை சும்மா விடாது - நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு குமுறல்.!

இந்த முறையும், திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறுகின்றன. எனவே, திமுகவினர் கூடுதல் இடங்களை பெறுவார்கள் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 5 முனை போட்டி நிலவுவது திமுகவுக்கு மிகவும் சாதகமான விஷயம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: #Breaking: "ஜெயிலுக்கு போகலையே?" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி..!