திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"சேரி மொழியில்.. கேவலப்படுத்த்துறது தான் வேலை." குஷ்புவின் சாதிய பேச்சால் கொந்தளிப்பு.?!
சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் நடிகை திரிஷா நடிப்பில் வெளியான படம் லியோ. இந்த திரைப்படத்தில் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். இதில் நடிகர் மன்சூர் அலிகானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளித்த போது, "குஷ்பூ மற்றும் ரோஜா போன்ற நடிகைகளுடன் பெட்ரூம் காட்சிகளில் நடித்த போது அவர்களை தூக்கி போட்டு ரேப் செய்வது போல சீன் இருக்கும். அதுபோல திரிஷாவையும் பண்ணலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரை விமானத்தில் அழைத்து வந்து விமானத்திலேயே கொண்டு சென்று விட்டனர்."என்று தெரிவித்து இருந்தார்.
இந்த விஷயம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இது பற்றி நடிகை குஷ்பூ தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். அவரது இந்த கருத்து பற்றி, திமுக வழக்கறிஞர் ஒருவர்,"மணிப்பூர் வழக்கில் அமைதியாக இருந்த குஷ்பூ திரிஷாவிற்கு மட்டும் எதற்காக பொங்குகிறார்.?!"என்று தெரிவித்து இருந்தார்.
அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பூ, "இதுபோல சேரி மொழியில் சிலர் எப்போதும் பேசுவார்கள். பெண்களை கேவலப்படுத்துவது தான் அவர்களுடைய நோக்கம். முதல்வர், ஸ்டாலினை சுற்றி இப்படி நிறைய பேர் இருக்கின்றனர்."என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.