96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
10 ஆம் வகுப்பு மாணவி மாதிரி மாறிட்டீங்க! லட்சுமி மேமனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
நடிகை லட்சுமி மேனன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் திரைப்படம் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன், கும்கி, நான் சிவப்பு மனிதன், கொம்பன், வேதாளம், றெக்க போன்ற படங்களில் நடித்துள்ளார். குடும்ப பாங்கான கதை அம்சங்களில் நடித்துவந்த இவர் சற்று மாடர்னான தோற்றத்தில் நடிக்க தொடங்கியதும் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைய தொடங்கியது.
மேலும், இவரது உடல் எடையும் இவருக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்தது. இந்நிலையில் றெக்க படத்தை அடுத்து தான் படிப்பில் கவனம் செலுத்தப்போவதாக கூறிவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கே பெற்றுவிட்ட லட்சுமி மேனன் தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
மேலும் இவர் விரைவில் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இயங்கிவரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்.
அந்தவகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மிகவும் ஒல்லியாக, கண்ணாடி முன் நின்று அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், பள்ளி செல்லும் குழந்தை போல் இருப்பதாகவும், 10 ஆம் வகுப்பு மாணவி போல் இருப்பதாகவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.