96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்!" மஹிமா நம்பியார் பேட்டி!
கேரளாவின் காஸர்கோடை சேர்ந்தவர் மஹிமா நம்பியார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், 2012ம் ஆண்டு "சாட்டை" திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து என்னமோ நடக்குது, புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டு பேசிய மஹிமா நம்பியார் தனக்கு நேர்ந்த சில கசப்பான சம்பவங்களை பற்றிக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "நான் என் திரை வாழ்க்கையில் பல அவமானங்களை சந்தித்துள்ளேன். அதில் ஒரு மறக்க முடியாத சம்பவம் உள்ளது.
அது என்னவென்றால், நான் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, அதன் படப்பிடிப்பும் நான்கு நாட்கள் நடந்த நிலையில், சில நாட்கள் கழித்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று மேனேஜர் ஒருவர் என்னிடம் கூறினார். மீண்டும் நான் அவரைத் தொடர்புகொண்டபோது, உங்களுக்கு பதில் வேறு நடிகையை கமிட் செய்திருக்கிறோம் என்று கூறினார்.
இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களே அழைத்துவிட்டு, பிறகு எதற்காக இப்படி என்னை அவமானப்படுத்தினார்கள்? பல நடிகைகளுக்கும் இப்படி நடக்கிறது. ஆனால் யாருக்கும் அவர்களுக்கான நியாயம் கிடைப்பதில்லை. இதை என்னால் மறக்கவே முடியாது" என்று மஹிமா கூறியுள்ளார்.