"அந்த மாதிரி விஷயங்கள் செய்வதற்காக குடி போதைக்கு அடிமையாகி விட்டேன்" மனம் திறந்த மனுஷா கொய்ராலா..



Actress Manisha openup in interview

தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்பம் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்கள் நடித்திருக்கிறார்கள்.

Manisha

மனிஷா கொய்ராலா தமிழில் இந்தியன், முதல்வன், பம்பாய், ஆளவந்தான், பாபா போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாபா' திரைப்படமே இவருக்கு தமிழ் சினிமாவில் கடைசி திரைப்படமாக இருந்தது.

'பாபா' திரைப்படம் மிகப்பெரும் தோல்வி அடைந்ததால் இந்தப் படத்திற்கு பின்பு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் மனிஷா கொய்ராலா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.

Manisha

அந்த பேட்டியில் மனிஷா கொய்ராலா, "நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். கேமரா முன்னால் நிற்பதற்கு பயமாக இருந்ததால் குடித்துவிட்டு நடிக்க தொடங்கினேன். இதுவே பழகிவிட்டது இதனால் என் வாழ்க்கை மிகவும் சீரழிந்து போய்விட்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.