"9 வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றை மறக்கவில்லை" சீனு ராமசாமி குறித்து நடிகை மனிஷா யாதவ் காட்டம்.!



Actress manisha yadhav angry post

கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்து மாடலாகவும், நடிகையாகவும் இருப்பவர் மனிஷா யாதவ். இவர் 2012ம் ஆண்டு "வழக்கு எண் 18/9" படத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவியாக அறிமுகமானார்.  தொடர்ந்து அவர் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Manisha

கடைசியாக 2020ம் ஆண்டு "சண்டிமுனி" என்ற திரைப்படத்தில் தான் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பில் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வலைப்பேச்சு பிஸ்மி பரப்பரப்பைக் கிளப்பியிருந்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சீனு ராமசாமி மனிஷா யாதவ் என் படத்தில் கூட மீண்டும் நடிப்பார் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து மனீஷா யாதவ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீனு ராமசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

Manisha

அதில் அவர் " 'ஒரு குப்பை கதை' ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடை நாகரீகத்திற்காகத் தான் நன்றி கூறினேன். சீனு ராமசாமியின் படத்தில் ஒருபோதும் நடிக்க மாட்டேன். 9 வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றை எதையும் நான் மறக்கவில்லை. சீனு ராமசாமி உண்மையைக் கூறவேண்டும்" என்று தனது பதிவில் கூறியுள்ளார்.