#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை நக்மாவா இது... என்ன அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாரே... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நக்மா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மாவுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
மேலும் நடிகை நக்மா ரஜினி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் நக்மா திரைப்பயணத்தில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. பின்னர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
நாளடைவில் நடிகை நக்மா அரசியலில் களமிறங்கினார். தற்போது ஒரு முக்கிய அரசியல் கட்சியில் பதவியில் இருக்கிறார். இந்நிலையில் நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அட நக்மா வா இது இப்படி குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.