குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாரா: அம்மணிக்கு இப்போ என்ன வயசு தெரியுமா?
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு இன்று புகழின் உச்சத்தில் உள்ளார் அம்மணி. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் Manassinakkare என்ற மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அன்றில் இருந்து இன்று வரை பல்வேறு படங்களில் நடித்துள்ள நயன்தாரா இன்று புகழின் உச்சத்தில் உள்ளார். ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கிவருகிறார் நயன்தாரா.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்நிலையில் நயன்தாரா இன்று தனது 36 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 36 வயது ஆகியும் அன்று பார்த்த அதே இளமையுடன் இன்றுவரை முன்னணி நாயகியாக ஜொலித்து வருகிறார் நயன்.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.