96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிரபல இயக்குனர் மீது பாலியல் தொல்லை புகார்! பரபரப்பைக் கிளப்பி பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!
தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பாயல் கோஷ். இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் பாலிவுட் சினிமாவில் அதிரடியான படங்களால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி வரவழைத்து, தன்னிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் எனவும், தான் கெஞ்சி அங்கிருந்து தப்பி வந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பாயல் கோஷல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனுராக் காஷ்யப் என்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இந்த புத்திசாலி மனிதருக்கு பின்னால் இருக்கும் தீய சக்தியை நாட்டு மக்கள் பார்க்கும் வகையில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை நான் அறிவேன். தயவு செய்து உதவுங்கள் என கூறியுள்ளார். பாயல் கோஷலின் இந்த குற்றச்சாட்டிற்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
@anuragkashyap72 has forced himself on me and extremely badly. @PMOIndia @narendramodi ji, kindly take action and let the country see the demon behind this creative guy. I am aware that it can harm me and my security is at risk. Pls help! https://t.co/1q6BYsZpyx
— Payal Ghosh (@iampayalghosh) September 19, 2020